நேட்டோ உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் முன் கனடா பிரதமர் தன்னை கேலி செய்ததற்கு, அமெரிக்க அதிபர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ, இம்மானுவேல் மக்ரோன் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் நேற்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நேட்டோ வரவேற்பு நிகழ்ச்சியில்,அமெரிக்க அதிபரின் 40 நிமிட செய்தியாளர் சந்திப்பை கேலி செய்து சிரித்தனர்.
இந்த வீடியோ காட்சியானது இணையம் முழுவதும் வைரலாக பரவியது.
இந்த நிலையில், ட்ரூடோவின் கருத்துக்களைக் கேட்டீர்களா என்று டிரம்பிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அவர் இரு முகம் கொண்டவர்".
"அவரை ஒரு நல்ல நல்ல பையனாக நான் பார்க்கிறேன். உண்மை என்னவென்றால், தேசிய உற்பத்தியில் 2% பாதுகாப்புக்காக செலவழிக்கும் இலக்கை அடையவில்லை என்பதற்காக நான் அவரை அழைத்தேன். அதைப் பற்றி கேட்கும்போது அவர் மகிழ்ச்சியடையவில்லை. வருத்தமுடன் இருந்தார் என்பதை என்னால் காண முடிந்தது" எனக்கூறியுள்ளார்.
மேலும், கனடாவிடம் பணம் இருக்கிறது. செலுத்தாத 2 சதவீதத்தை அவர் செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.