கனடா விமான விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 7 பேர் பலி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் கனடாவில் வாழும் புதுமணத்தம்பதியும் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த Piper PA-32 ரக விமானத்தில் ஆறு பேர் பயணிக்கலாம் என்கிற நிலையில், ஏழு பேர் பயணித்துள்ளனர்.

கிங்க்ஸ்டன் பகுதிக்கருகே உள்ள வனப்பகுதியில் அந்த விமானம் புதனன்று மாலை 5 மணியளவில் மாயமானது.

அதில் டெக்சாசைச் சேர்ந்த விமானியான Otabek Oblokulov, அவரது மனைவி மற்றும் 3,11,15 வயதுள்ள அவர்களது பிள்ளைகள் என, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பயணித்துள்ளார்கள்.

அவர்களுடன் கனடாவில் ரொரன்றோவில் வாழும் புதுமணத்தம்பதியான Bobomurod Nabiev மற்றும் அவரது மனைவியும் பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவருமே உஸ்பெகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

கியூபெக்கில் வாழும் Oblokulovவின் நண்பரான Mehmet Basti என்பவர் வீட்டில், Thanksgiving பண்டிகையை கொண்டாடுவதற்காக அனைவரும் புறப்பட்டுள்ளனர்.

Markham விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் கியூபெக் நோக்கி செல்லும் வழியில் கிங்க்ஸ்டன் நோக்கி திரும்பியுள்ளது.

அப்போது மோசமான வானிலை காரணமாக அது கிங்க்ஸ்டன் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

நண்பர்கள் விமானம் இறங்கிவிட்டு அழைப்பார்கள் என்று காத்திருந்த Mehmet, அவர்கள் வராததால் திகைப்படைந்திருக்கிறார்.

பின்னர் விமானம் விழுந்த தகவல் வெளியாக, Mehmetதான் சென்று உடல்களை அடையாளம் காட்டியிருக்கிறார்.

நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாடச் சென்ற புதுமணத் தம்பதி உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்