ஒரே நாளில் கோடீஸ்வரியானதால் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத பெண்! வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

Mississauga நகரை சேர்ந்தவர் லிசா மேரி. இவர் Brampton நகரில் Lotto 6/49 லொட்டரி டிக்கெட்டை வாங்கினார்.

இதில் அவருக்கு பம்பர் பரிசாக $1 மில்லியன் விழுந்துள்ளது.

இது குறித்து லிசா கூறுகையில், நான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததை உறுதி செய்த போது மகிழ்ச்சியில் அழுதுவிட்டேன், எனக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

டொரண்டோவில் உள்ள OLG Prize Centre-ல் என் பரிசு பணத்தை பெற்று கொண்டேன், இது தான் எனக்கு லொட்டரியில் விழுந்த மிகப்பெரிய பரிசு தொகையாகும் என கூறியுள்ளார்.

Lotto 6/492 கடந்த 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அதிலிருந்து தற்போது வரை மொத்தமாக $12.8 பில்லியன் வரையிலான பரிசுகளை அதிர்ஷ்டசாலிகள் அள்ளியுள்ளனர், இதில் இதுவரை 1,385 பேர் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

OLG photo

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்