100 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கிய கப்பல் தற்போது வெளியே வந்த அதிசயம்! ஆச்சரியப்படுத்தும் வீடியோ

Report Print Raju Raju in கனடா
536Shares

கனடாவில் 101 ஆண்டுகளுக்கு முன்னர் நீர் வீழ்ச்சியில் மூழ்கிய கப்பல் ஒன்று தற்போது வெளியில் வந்த வீடியோ வைரலாகியுள்ளது.

கனடாவில் உள்ள நயகரா நீர் வீழ்ச்சியின் அருகில் கடந்த 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி இரண்டு பேருடன் பயணித்த கப்பல் ஒன்று பாறைகளுக்கு இடையே சிக்கியது.

அந்த கப்பல் மீட்கப்படாத நிலையில் அதிலிருந்த இரண்டு பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

பின்னர் கப்பல் நீருக்குள் மூழ்கியது, இந்நிலையில் கனடாவில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 101 ஆண்டுகள் பழமையான இந்த கப்பல் தற்போது வெளியில் வந்துள்ளது.

கடந்த 1ம் திகதி கப்பலின் பக்கவாட்டு பகுதி மட்டும் வெளியே தெரிந்த நிலையில் தற்போது முழு கப்பலும் வெளியே தெரிந்துவருகிறது.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்