வெளிநாட்டில் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்: வரவேற்று வாழ்வளித்துள்ள கனடா!

Report Print Balamanuvelan in கனடா

ஈரானிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகு ஒன்றில் சென்ற ஒரு நபர், கொடிய சிறை ஒன்றில் அடைக்கப்பட்டு, வாழ்வே முடிந்தது என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், கனடா அவருக்கு புது வாழ்க்கை கொடுத்திருக்கிறது.

Amirhossein Sahragard (27) புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகு ஒன்றில் சென்றார்.

அவுஸ்திரேலியா, படகில் வருவோருக்கு புகலிடம் அளிப்பதில்லை, அத்துடன் அவர்களை அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டில் சிறையில் அடைக்கிறது.

அப்படி பப்புவா நியூகினியாவின் Manus தீவில் உள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார் Sahragard.

அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் கடுமையான அடியும் உதையும் படுவதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு.

Stephen Watt

கொடுங்குற்றம் சாட்டப்பட்டுள்ள கைதிகளை விட தங்கள் நிலைமை மோசமானதாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் Sahragard.

அவர்களுக்காவது, தாங்கள் எப்போது விடுவிக்கப்படுவோம், அல்லது விடுவிக்கப்படுவோமா அல்லது ஆயுள் முழுவதும் அங்குதான் இருக்க வேண்டுமா என்ற விடயமாவது தெரியும்.

ஆனால், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும்போது, அவ்வளவுதான் இனி வாழ்க்கையே இல்லை என்று நம்பிக்கை அற்ற நிலைமைக்கு வந்துவிட்டார் Sahragard.

அப்போதுதான் அவருக்கு அந்த நல்ல செய்தி கிடைத்தது. புகலிடம் கோரும் அகதிகளையும் கனேடியர்களையும் இணைக்கும் அமைப்பு ஒன்று Sahragard குறித்த தகவலை கனடாவிலிருக்கும் அவரது தூரத்து உறவினர்களுக்கு தெரிவித்துள்ளது.

Stephen Watt

கனடாவில், தனியார் சிலர் சேர்ந்து அகதி ஒருவருக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டம் ஒன்று உள்ளது.

குறைந்தது ஐந்து பேர் சேர்ந்து, 16,500 டொலர்கள் சேகரித்து ஒருவரை ஸ்பான்சர் செய்யலாம்.

அதன்படி Sahragardஇன் உறவினர்கள் அவரை ஸ்பான்சர் செய்ய, நீண்ட சிறைவாசத்திற்குப் பின் கனடா வந்தடைந்துள்ளார் அவர்.

மீண்டும் சொந்த நாட்டு சாப்பாட்டை சாப்பிட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி என சிரித்துக்கொண்டே கூறும் Sahragard, கனடா ஒரு சிறந்த நாடு, ரொரான்றோ ஒரு சிறந்த நகரம் என அடுக்கிக்கொண்டே போகிறார்.

என்றாலும், இன்னும் அடிக்கடி இரவில் கனவு கண்டு பயந்து விழிக்கும்போது, தான் இன்னமும் அந்த கொடிய சிறையில் இருப்பதாக தோன்றுவதிலிருந்து மட்டும் உடனடியாக விடுபடமுடியவில்லை என்கிறார் கண்களில் மிரட்சியுடன்!

தற்போது Sahragard ஒரு அகதியோ, புகலிடக்கோரிக்கையாளரோ அல்ல, அவருக்கு இப்போது ஒரு நிரந்தர வாழிட உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆம், கனேடிய குடிமக்களுக்கு கொடுக்கப்படுள்ள உரிமைகளில் 90 சதவிகிதம், வாக்குரிமை தவிர்த்து, Sahragardக்கும் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்