அவன் ஒல்லியாக இருப்பான்! வாகன நிறுத்துமிடத்தில் ஆண், பெண்ணுக்கு நடந்த பரிதாபம்.. பொலிசார் கூறிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் துப்பாக்கி முனையில் ஆண் மற்றும் பெண்ணிடம் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் பொலிசார் அது குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

டொரண்டோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் Danforth அவென்யூ மற்றும் Savarin தெருவில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் துப்பாக்கியால் தாக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடன் கொள்ளையடித்து சென்றுள்ளான்.

பாதிக்கப்பட்ட இருவரின் உயிருக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ள பொலிசார் குற்றவாளி குறித்தும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கருப்பு நிறத்தில் ஒல்லியான உருவத்தில் 5 அடி 11 அங்குலத்தில் குற்றவாளி இருப்பான் எனவும் அவன் ஆபத்தானவன் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்