கனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்? புகைப்படத்துடன் பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இளம்பெண் மாயமானதாக பொலிசார் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் கிடைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

டொரண்டோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஏஞ்சலின் மேனன் (28) என்ற பெண் அக்டோபர் 18ஆம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணியளவில் டொனால்ட்ஸ் அவ் சாலையில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் மாயமான போது சாம்பல் நிற சட்டை மற்றும் கருப்பு ஷூ அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டதோடு அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏஞ்சலின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதோடு இதற்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்