கனடாவில் கார் விபத்தில் பிரபல நடிகர் மரணம்... வெளியான அவரின் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

ஜமைக்காவை சேர்ந்த பிரபல நடிகரும், இசைக்கலைஞருமான Louie Rankin கனடாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜமைக்காவில் கடந்த 1953ஆம் ஆண்டு பிறந்த Louie Rankin பிற்காலத்தில் திரைத்துறை மற்றும் இசைத்துறையில் பிரபலமானவராக திகழ்ந்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான பெல்லி என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

66 வயதான Louie Rankin சில காலமாக கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை காலையில் தனது காரில் Louie Rankin சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த லொறி மீது கார் மோதியது.

இந்த கோர விபத்தில் Louie Rankin சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் பயணித்த கார் முற்றிலுமாக சேதமடைந்தது. Louie Rankin-வின் மறைவுக்கு அவர் துறையை சார்ந்த நபர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்