தமிழகத்தையே உலுக்கிய சுபஸ்ரீ மரணம்... கனடா செல்வதற்கான தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in கனடா
999Shares

தமிழகத்தில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் அதிமுக நிர்வாகியால் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது.

இதனால் தடுமாறி சாலையில் விழுந்த அந்த பெண்ணின் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பேனர் வைத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்ற போராட்டம் வெடித்தது. ஆனால் அவர் கைது செய்யப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது கனடா செல்வதற்கான தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். எங்கள் மகள் உயிரோடு இருந்திருந்தால், கனடா சென்றிருப்பாளே என்று கண்கலங்கியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்