கனடாவில் 15 நாட்களாக காணாமல் போன 14 வயது சிறுமி! வெளியான அவரின் புகைப்படம்

Report Print Raju Raju in கனடா
213Shares

கனடாவில் 14 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

டொரண்டோ பொலிசார் தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மாயமான சிறுமி குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Lupeolo McArthur என்ற 14 வயது சிறுமி கடந்த 14ஆம் திகதி மாலை 6 மணியளவில் கடைசியாக கிங்ஸ்டன் சாலை மற்றும் பெல்லாமி சாலை உள்ள பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுமி Lupeolo குறித்த அங்க அடையாளங்களும் கூறப்பட்டுள்ளது.

அவர் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் கருப்பு நிற சுருட்டை முடி கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு தொலைபேசி எண்களை கொடுத்துள்ள பொலிசார் Lupeolo குறித்த தகவல் யாருக்கேனும் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்