இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் கனடிய பயணி செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த பயணி ஒவர் இந்தியாவுக்கு வந்த நிலையில் விமானநிலையத்தில் குடியேற்ற அதிகாரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கனடாவை சேர்ந்த பயணி ஒருவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்ஸா விமானம் மூலம் ஜேர்மனியின் முனிச் நகரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்தார்.

வெளிநாட்டு பயணிகள் பிற நாட்டுக்குள் நுழையும் போதும், அங்கிருந்து வெளியேறும் போதும் குடியேற்ற அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுவது வாடிக்கையான ஒன்று என்பதால், அதிகாரி ஒருவர் பயணியை சோதனையிட்டுள்ளார்.

அப்போது, குடியேற்றம் தொடர்பான விண்ணப்பத்தை ஏன் முறையே நிரப்பவில்லை எனவும், அதுதொடர்பான விதிகள் பற்றி தங்களுக்கு தெரியாதா எனவும் குடியேற்ற அதிகாரி கனடா பயணியிடம் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பயணி, அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து குடியேற்ற அதிகாரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வாக்குவாதம் செய்த கனடிய பயணி உடனடியாக லுப்தான்ஸா விமானத்தின் மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்