தங்கையை கௌரவ கொலை செய்த நபர்: கனடாவில் பதுங்கியுள்ளாரா?

Report Print Balamanuvelan in கனடா

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தன் தங்கையை கொலை செய்த ஒருவர் கனடாவில் பதுங்கியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அப்படி ஒரு நபர் கனடாவுக்குள் ஊடுருவினாரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பெத்லஹேமுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரம் Beit Sahour.

அங்கு வாழ்ந்து வந்த Israa Ghrayeb என்ற பெண், திருமணத்துக்குமுன் தனது காதலரை சந்திக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இது தங்கள் குடும்ப கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாக கூறி Israaவின் தந்தையும் சகோதர்களும் அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்புவதற்காக Israa ஜன்னல் வழியாக கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

கீழே விழுந்ததில் அவரது முதுகெலும்பில் பாதிப்பு ஏற்பட, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் Israa.

இதற்கிடையில் மருத்துவமனைக்கு வந்த Israaவின் உறவினர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அங்கு வைத்தே கடுமையாக தாக்கியுள்ளார்கள். அவர் சத்தமிடுவதை நர்ஸ் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் Israaவை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளது அவரது குடும்பம். சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்து போனதாக Israaவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு பேய் பிடித்திருந்ததாகவும், அந்த பேயை துரத்துவதற்காகத்தான் மருத்துவமனயில் வைத்து அவரை அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துளனர்.

இதற்கிடையில் அடிவாங்கி அவர் அலறும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாக, Israa கௌரவக் கொலை செய்யப்பட்டதாக மக்கள் கொந்தளித்தனர்.

மக்கள் பேரணிகளை நடத்தத் தொடங்கியதையடுத்து, பாலஸ்தீன அரசும் நடவடிக்கைகளில் இறங்கி Israaவின் குடும்பத்தினர் சிலரை கைது செய்துள்ளனர்.

ஆனால் முக்கிய குற்றவாளியான Israaவின் அண்ணனான Ihab Ghrayeb என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

அவர் கனடாவிலிருந்து வந்துதான் Israaவை கொலை செய்ததாகவும், மீண்டும் கனடாவுக்கு திரும்பிவிட்டதாகவும் ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

எனவே கனடாவும் அப்படி ஒரு நபர் தங்கள் நாட்டுக்குள் வந்திருக்கிறாரா என்று கண்டறிவதற்காக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்