கனடா சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்.. வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி திடீரென உயிரிழந்துள்ளார்.

Miramichi நகரின் தென்மேற்கு பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் Atlantic Institution என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது.

இங்கு ஓலிவர் (32) என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார்.

மோசமான தாக்குதல் நடத்தியது, உடலில் காயம் ஏற்படுத்தியது, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2014 டிசம்பர் 23ஆம் திகதியில் இருந்து அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் திடீரென ஓலிவர் உயிரிழந்துவிட்டதாக சிறை வார்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் ஓலிவர் மரணம் தொடர்பாக விசாரிக்கப்படும் என கனடிய அரசாங்கத்துக்கு கீழ் இயங்கும் Correctional Service Canada தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்