கனேடிய சீரியல் கில்லர்கள் தற்கொலை செய்யும் முன் பதிவு செய்த வீடியோ: பொலிசார் வெளியிட்ட தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய சீரியல் கில்லர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை குற்றவாளிகளின் குடும்பத்தாருக்கு காட்டியுள்ளார்கள்.

மூன்று கொலைகளுக்காக கனேடிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky (18) வழக்கு, கனடாவையே கொந்தளிக்கச் செய்த நிலையில், நெல்சன் நதிக்கருகே அவர்கள் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்கள்.

உடற்கூறு ஆய்வில், அவர்கள் இருவரும் துப்பாக்கியால் தங்களையே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

இந்நிலையில், உயிரிழந்த குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனை பொலிசார் ஆய்வு செய்தபோது, அதில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்குமுன், வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளதைக் கண்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் என்ன உள்ளது என்பதைக் கூற மறுத்த பொலிசார், அதில் உள்ள தகவல்கள், வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த வீடியோவின் ஒரு சிறு பகுதி மட்டும் கொலையாளிகளின் குடும்பத்திற்கு காட்டப்பட்டுள்ளது.

அந்த வீடியோ எவ்வளவு நேரம் ஓடக்கூடியது என்பதை பொலிசார் தெரிவிக்காத நிலையில், கொலையாளிகள் பேசும் 30 விநாடி நேர காட்சி மட்டும் அவர்களது பெற்றோருக்கு காட்டப்பட்டுள்ளது.

அதில் கொலையாளிகள் தங்கள் குடும்பத்தினருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளதோடு, தங்கள் கடைசி ஆசையை வெளிப்படுத்தியுள்ளதாக பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

முக்கியமாக தங்கள் உடல்களை என்ன செய்வது என்பது குறித்து கொலையாளிகள் தெரிவித்துள்ளனராம்.

McLeodம் Schmegelskyயும், வான்கூவர் தாவரவியலாளரான Leonard Dyck, அவுஸ்திரேலியரான Lucas Fowler மற்றும் அவரது காதலியான, அமெரிக்கப்பெண்ணான Chynna Deese ஆகியோரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்