கழிவறைகளை தேடி செல்வதால் புகழ் பெற்ற ஒரு நபர்: அவரை ஆச்சரியப்படுத்திய ஒரு கழிவறை!

Report Print Balamanuvelan in கனடா

கழிவறைகளைத் தேடிச் சென்று அவற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யும் ஒரு நபரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடரும் ஆச்சரியம் நிகழ்ந்து வருகிறது.

அவுஸ்திரேலியாவைச் சேந்த Dan Schaumann தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

பல நாடுகளுக்குச் செல்லும் Dan, அந்த நாடுகளில் காணப்படும் பல்வேறு வகை கழிவறைகளை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்வதுண்டு.

முற்றிலும் சிறந்த கழிவறை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக அவர் பல நாடுகளுக்கு சென்று வருகிறார்.

அவ்வகையில் East Coast Trail - Freshwater Bay என்ற பகுதியில் தான் கண்ட கழிவறை ஒன்று தன்னை ஆச்சரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் Dan.

அப்படி என்ன விசேஷம் அந்த கழிவறையில்? அந்த கழிவறை திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளதுதான் அதன் சிறப்பு என்கிறார் Dan.

பாவம், பல ஏழை நாடுகளில் இன்னமும் திறந்த வெளிதான் கழிப்பறையாகவே பயன்படுத்தப்படுகிறது என்ற விடயம் அவருக்கு தெரியாதுபோலும்!

View this post on Instagram

Today I was in Suzhou, about 100km west of Shanghai. I diverted off the beaten track to walk around some laneways when I chanced upon not one but two local-style latrines. I must say up until today I’ve been pretty impressed with the availability and cleanliness of public toilets during my time in China so far but seeing the reality of sanitation in less-touristic areas really puts things into perspective. At least they both had running water and a modicum of privacy but I’m sure there are others out there in worse condition than this. Sanitation - or lack thereof - is definitely something I’d like to explore more through this lil photo project of mine in the future. As fun and crazy as it is to find the artistic & elegant toilets there is a serious side to it too! #WorldToiletDay #sanitationforall

A post shared by Toilography (@toilography) on


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்