சட்டத்தை மீறிவிட்டார்! கனடா பிரதமர் மீது குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in கனடா

ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எஸ்.என்.சி லாவின் விசாரணையின் போதே முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றதாக பிரதமர் மீது நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எஸ்.என்.சி, லிபியாவில் ஒப்பந்தத்தை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

இது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நிறுவனத்துக்கு ஆதரவாக பிரதமர் செயல்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ஜஸ்டின், அதன் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்