கனடாவில் முன்னாள் மனைவி மீது ஆத்திரப்பட்ட கணவர்... நடுரோட்டில் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் முன்னாள் மனைவியை தீவைத்து கொளுத்திய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Quebec மாகாணத்தை சேர்ந்த 39 வயதான நபர் தனது 27 வயது முன்னாள் மனைவியை இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் செல்லும் போது துரத்தி சென்று அவர் மீது தீவைத்து கொளுத்தினார்.

இதையடுத்து வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்பெண்ணின் முகம், கைகள், உடலின் பின்பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் மீது அவர் முன்னாள் கணவர் தீவைத்ததை பெண்ணின் தாய் மற்றும் குழந்தைகள் நேரில் பார்த்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களோடு மேலும் சிலரும் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ள நிலையில் அவர்களை சாட்சிகளாக பொலிசார் சேர்த்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்