நோயாளியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பின்னணி கொண்ட தமிழராகிய ஒரு பெண் மருத்துவர் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
தீபா சுந்தரலிங்கம் (37)என்னும் பிரபல புற்றுநோய் மருத்துவர், டொராண்டோவில் புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னிடம் வந்த நோயாளியுடன், பல தடவைகள் கடமை நேரத்தில் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு மருத்துவர் உரிமத்தை இழந்தார்.
தீபா, தனது வீட்டிலும், அவரது மருத்துவமனையிலும், நோயாளியின் படுக்கையிலும், அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் பின்னணியைக் கொண்ட பெண் புற்றுநோய் மருத்துவர் ஒருவர், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டில் பணியை இழந்தது வைத்திய உலகிலும், தமிழ் கூறும் நல்லுலகிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், தீபா மீது குற்றம் சாட்டியவரின் குரல் மட்டுமே உரத்து ஒலித்த நிலையில், தீபா வாய் திறக்கவேயில்லை.
இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளார் தீபா. நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர் தான்தானேயொழிய குற்றம் சாட்டியவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.
தன்னை, உணர்வு ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளவும் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்டவர், என்று வர்ணித்துள்ள தீபா, தன்னை பிணைக்கைதியாக வைத்து தன்னுடன் பேசவோ தனக்கு ஆபாச செல்பிக்களை அனுப்பவோ செய்யாவிட்டால் மருத்துவக் கல்லூரியில் புகாரளிக்கப்போவதாக, தன் மீது குற்றம் சாட்டியவர், தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
தான் ஒருபோதும் தனது நோயாளியிடம் அத்து மீறவில்லை என்றும், தான் அவரது சிகிச்சையை முடித்து, இனி தான் அவரது மருத்துவர் இல்லை என்ற நிலை வந்த பிறகே பாலியல் உள்நோக்கமற்ற ஒரு உறவையே அவருடன் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
ஆனால் பாலியல் உறவுக்கு சம்மதிக்காவிட்டால், தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை வெளிக்கொண்டுவந்துவிடுவதாக தன்னை அந்த நபர் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை அவர் தொடர்ந்து வற்புறுத்தியும், தான் தனது நோயாளியுடன் பாலியல் உறவு கொள்ளவோ, ஆபாச செல்பிக்களை அனுப்பவோ இல்லை என அவர் மறுத்துள்ளார்
தன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது அதிர்ச்சியிலும் அவமான உணர்விலும் பயத்திலும் இருந்ததாலேயே, தான் விசாரணையின்போது அமைதியாக இருந்ததாகவும், அதனால்தான், இப்போது தான் குற்றவாளி இல்லை என வாதிட தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மருத்துவர் தீபா.
இதே கனடாவில், மனிதர்களின் தலையை வெட்டியவர்களுக்கும், பொலிசாரை கொலை செய்தவர்களுக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளபோது, மருத்துவர் தீபாவுக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கலாமே என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
