கனடாவில் வீடு புகுந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தை: தந்தை உள்ளிட்ட நால்வர் கைது

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் பிராண்ட்ஃபோர்ட் பகுதியில் வீடு புகுந்து 2 வயது குழந்தையை வலுக்கட்டாயமாக கடத்திய விவகாரத்தில் தந்தை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த ஹாமில்டன் பொலிசார், சுமார் ஒரு மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் குழந்தையை கடத்திய அந்த 37 வயது தந்தை சரணடைய ஒப்புக்கொண்டதாகவும், குழந்தையை ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இரவு முழுவதும் விடுக்கப்பட்டிருந்த அம்பர் எச்சரிக்கையும் விலக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வியாழனன்று பிராண்ட்ஃபோர்ட் பொலிசாருக்கு கிடைத்த புகாரின் பேரில் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர்.

2 வயது குழந்தையுடன் அவரது தந்தையும் இரு பெண்களும் வாகனம் ஒன்றில் நள்ளிரவு நேரம் காணப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பெண் ஒருவர் அளித்த புகாரில், தமது 2 வயது குழந்தை அவரது தந்தையால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதாகவும், அவருடன் இரு பெண்களும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிராண்ட்ஃபோர்ட் பொலிசார் அந்த நபருடன் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தாம் இருக்கும் இடத்தையும் பொலிசாருக்கு தெரிவிக்க மறுத்துள்ளார்.

இதனிடையே ஹாமில்டன் பொலிசார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த நபரிடம் மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர்.

நீண்ட ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து 2 மணியளவில் குழந்தையை பொலிசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தந்தை உள்ளிட்ட மூவரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்