கனடாவில் கொல்லப்பட்ட ஜோடி வழக்கில் பரபரப்பு திருப்பம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சீரியல் கில்லர் ஒருவனிடம் சிக்கினார்களா என்ற கேள்வி எழுந்தது.

மூத்த அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான Lucas Fowler (23) மற்றும் அவரது காதலியான அமெரிக்காவைச் சேர்ந்த Chynna Deese (24) ஆகியோரின் உடல்கள், கனடாவின் நெடுஞ்சாலை 97இல், பிரபல சுற்றுலாத்தலமான Liard Hot Springsஇன் அருகில் கண்டெடுக்கப்பட்டன.

அதே இடத்தில் அவர்கள் பயணித்ததாக கருதப்படும் நீல நிற செவ்ரோலே வேன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky (18) என்னும் இரு இளைஞர்கள் பயணித்த வாகனம் தீப்பற்றியதையடுத்து அவர்கள் வடக்கு Saskatchewan பகுதியில் ஒருமுறை பொலிசார் கண்ணில் பட்டிருக்கின்றனர்.

அந்த தீவிபத்து குறித்து விசாரிக்கும்போது, அந்த வாகனம் நின்ற இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் வேலை தேடி செல்வதாக கூறிச் சென்ற Kam McLeod மற்றும் Bryer இருவரும் தத்தம் குடும்பங்களை தொடர்பு கொள்ளாததால், அவர்களை காணவில்லை என்று பொலிசார் அறிவித்திருந்தனர்.

Lucasம் Chynna Deeseம் பிணமாக கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் இன்னொருவரும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, தற்போது, இவர்கள் மூவரும், காணாமல் போனதாக கருதப்பட்டு வந்த Kam McLeod மற்றும் Bryerஆல் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Kam McLeod மற்றும் Bryer ஆகிய இருவரும் இனி காணாமல் போனவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று கூறிய கனேடிய பொலிஸ் அதிகாரியாகிய Sgt. Janelle Shoihet, அவர்கள் இருவரும் தற்போது Lucas, Chynna Deese, மற்றும் இன்னொரு நபரின் கொலை வழக்கில் குற்றாவாளிகள் என சந்தேகிக்கப்படுகிறார்கள் என்றார்.

இவர்களைக் குறித்த தகவல் ஏதாகிலும் கிடைத்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்து உதவுமாறு கனேடிய பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்