போதையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மருத்துவ மாணவர்: தீர்ப்பு என்ன?

Report Print Balamanuvelan in கனடா

போதையில் இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மருத்துவ மாணவர் ஒருவரது வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு என்ன தண்டனை என்பது அடுத்த மாதம் முடிவு செய்யப்பட உள்ளது.

டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் மருத்துவ மாணவரான Prachur Shrivastava (27) போதையிலிருந்தபோது, சுயநினைவில்லாமல் படுத்திருந்த ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.

பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த நண்பர்கள் சிலர் போதைலிருந்ததால், நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினர்.

அப்போது போதையில் சுய நினைவின்றி இருந்த லாரா என்ற பெண்ணை Shrivastava பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியிருக்கிறார்.

தூக்கத்திலிருந்து விழித்த லாரா, தனக்கு நடந்ததை அறிந்து பொலிசில் புகாரளித்திருக்கிறார்.

உடனடியாக அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் உடலிலும், அந்தரங்க உறுப்புக்குள்ளும் Shrivastavaவின் DNA இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், Shrivastava ஒரு சிறந்த மாணவர் என்றும், போதையில் இருக்கும்போது, தவறு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அதை முட்டாள்தனமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் ஏற்கனவே அவருடன் இருந்த மாணவர்கள், பார்ட்டி முடிந்து வீட்டுக்குள் வரும்போதே, படுத்திருந்த லாராவைக் கண்ட Shrivastava, அந்த பெண்ணின் அருகே சென்று படுத்துக் கொள்ள அவர் ஆர்வம் காட்டியதாக சாட்சியமளித்திருந்தார்கள்.

சுய நினைவின்றிக் கிடக்கும் ஒரு பெண், வாய்ப்பு அல்ல என்று தெரிவித்த அரசுதரப்பு வழக்கறிஞர், சிறந்த மாணவர்கள் சுய நினைவின்றிக் கிடக்கும் பெண்ணை வன்புணர்வு செய்ய மாட்டார்கள் என்று வாதிட்டார்.

நேற்று இந்த வழக்கின் இரண்டாவது சுற்று விசாரணைகள் நடந்த நிலையில், Shrivastava எத்தனை ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என்பதை, அடுத்த மாதம் முடிவு செய்ய இருப்பதாக ஆல்பர்ட்டா நீதிபதி Jolaine Antonio தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers