கனடாவில் துயரம்: ஏரியில் மோதி மாயமான விமானம்.. பயணிகளை தேடும் பணி தீவிரம்

Report Print Basu in கனடா

கனடாவில் மிதக்கும் விமானம் ஏரியில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கியூபெக்கை தலமையிடமாக கொண்ட ஏர் சாகுவேனே நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு சிறிய சார்ட்டர் விமானமான ஹவில்லேண்ட் டி.எச்.சி -2 பீவர் விமானத்தில் ஏழு பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் நியூஃபவுண்ட்லேண்ட் மாகாணத்தின் ஒரு பகுதியான லாப்ரடோர் மற்றும் கனடாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள லாப்ரடாரில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் விமானி, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் என 7 பேர் மீன்பிடி பயணம் மேற்கொண்டுள்ளனர். கிராஸ்ரோட்ஸ் ஏரியில் திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு விமானம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

8 மணிவரை விமானம் தரையிறங்காததால் விமான நிறுவனம் ஜே.ஆர்.சி.சி என அழைக்கப்படும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து, அக்குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் வடக்கு லாப்ரடாரில் உள்ள மிஸ்டாஸ்டின் ஏரியின் தென்கிழக்கு முனையில் ஜே.ஆர்.சி.சி குழுவினரால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஜே.ஆர்.சி.சி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...