கனடாவில் தீப்பற்றி எரிந்த ஐந்து பள்ளிப்பேருந்துகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து பள்ளிப்பேருந்துகள் கொழுந்து விட்டு எரியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில் பேருந்துகள் பயங்கரமாக தீப்பற்றி எரிவதையும் கரும்புகை எழும்புவதையும் காண முடிகிறது.

இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் St. Mary's Road பகுதிக்கருகில் நடைபெற்றுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்துள்ளார்கள். அப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் தண்ணீர் டேங்கர் ஒன்றை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, சம்பவத்தின்போது வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், வின்னிபெக் நகர பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...