உலகின் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றில் விழுந்த நபர்: உயிர் தப்பிய அதிசயம்!

Report Print Balamanuvelan in கனடா
491Shares

உலகின் பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நயாகரா நீர் வீழ்ச்சியில் விழுந்த ஒரு நபர் அதிசய விதமாக உயிர் தப்பியுள்ளார்.

நயாகரா நீர் வீழ்ச்சியானது, American நீர் வீழ்ச்சி, Bridal Veil நீர் வீழ்ச்சி மற்றும் Horseshoe நீர் வீழ்ச்சி என மூன்று பாகங்களைக் கொண்டது. இவற்றில் முதல் இரண்டும் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ளன.

Horseshoe நீர் வீழ்ச்சி கனடா பகுதியில் அமைந்துள்ளது. கனடா பகுதியில் உள்ள Niagara Parks பொலிசாருக்கு அதிகாலை 4 மணியளவில் Horseshoe நீர் வீழ்ச்சியில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சுவரில் ஏறி நதியில் குதித்த அந்த நபரை வெள்ளம் அடித்துக் கொண்டு போக, அவர் நீர் வீழ்ச்சியில் விழுந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

விரைந்து வந்த பொலிசார் அந்த நபரைத் தேடும் முயற்சியில் இறங்க, நீர் வீழ்ச்சியின் கீழ் பகுதியில், நீர் வீழ்ச்சியை காண்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பகுதியில் அந்த நபர் உட்கார்ந்திருந்ததைக் கண்டுள்ளனர்.

உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சட்டம் அனுமதிக்காததால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. Horseshoe நீர் வீழ்ச்சியில் 188 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதோடு, 100 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது.

அதாவது, அந்த நபர் சுமார் 188 அடி உயரத்திலிருந்து விழுந்தும், அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்