கனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ரெஜினா பகுதியில், உண்டு உறைவிட பள்ளி ஒன்றில் படித்து வந்த பூர்வக்குடியின மாணவர்கள் பலருக்கு அந்த பள்ளியே இடுகாடாகிப்போன நிலையில், தற்போது கடந்த கால துயர சம்பவங்களுக்கு பிராயச்சித்தமாக அந்த நிலம் பூர்வக்குடியினருக்கே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தங்கிப் படிக்கச்சென்ற பூர்வக்குடியின மாணவர்களின் பாரம்பரியங்களை மீறி அவர்களது முடி குட்டையாக வெட்டப்பட்டது, உடைகள் மாற்றப்பட்டன.

வெள்ளையர்களைப்போல மாற அவர்கள் வற்புறுத்தப்பட்டனர்.

படிக்கச் சென்ற இடத்தில் தோட்ட வேலை செய்வது, செருப்பு தைப்பது என பூர்வக்குடியின மாணவர்கள் அடிமைகளாக அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.

அவர்களில் பலர் காச நோய்க்கும் அம்மை நோய்க்கும் பலியாகினர், பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

அப்படி இறந்த மாணவர்கள் சுமார் 300 பேர், அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர்.

ஒரே கல்லறைக்குள் பல மாணவர்கள் அடக்கம் செய்யப்பட அவமரியாதையும் நடந்தது. பின்னர் காலப்போக்கில் அந்த நிலம் பலரது கைமாறியது.

தற்போது ட்ரூடோ அரசு பூர்வக்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயசித்தம் செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அவற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாக அந்த பூர்வக்குடியின சிறுவர்கள் அடக்கம் செய்யப்பட நிலம், பூர்வக்குடியினருக்கே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த பூர்வக்குடியின சிறுவர்கள் மறக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கனடாவில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers