பல பேரை கருவுற செய்து தந்தையான நபர்.. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த மருத்துவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளுக்கு தனது உயிரணுக்களை செலுத்தி கருவுற செய்த விடயம் அம்பலமான நிலையில் அவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது பல பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஒட்டாவா நகரை சேர்ந்த மருத்துவர் பெர்னார்ட் நார்பென் (80). இவர் முன்னர் மகப்பேறு மருத்துவராக இருந்த போது தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு தனது உயிரணுக்களை செலுத்தியுள்ளார்.

இதன் மூலம் பலர் கருவுற்று குழந்தை பெற்றனர். இதில் சில வருடங்களுக்கு முன்னர் டிக்சான் என்ற பெண் மருத்துவர் நார்பென் தான் தனது தந்தை என டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்தார்.

இதன்பின்னர் சில பெண்களும், ஆண்களும் டிக்சான் தான் தங்களது தந்தை என கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.

இப்படி பலரும் அவர் மீது குற்றஞ்சாட்டியதால் டிக்சான் மீது மருத்துவ ஒழுங்குமுறை குழு விசாரணை கமிஷனை அமைத்தது.

தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் டிக்சானின் மருத்துவ உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 நாட்களுக்குள் அவர் $10,730 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதோடு டிக்சனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers