குற்றவாளியை முரட்டுத்தனமாக தாக்கும் பொலிசார்: வெளியான வீடியோவால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் பொலிசார் குற்றவாளி ஒருவரை முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எட்மண்டன் பொலிசார் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை அந்த கட்டிடத்தின் மேலிருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

சீருடை அணிந்த ஆறு பொலிசார், ஒரு குற்றவாளியை கைது செய்வதைக் காட்டும், இரண்டு நிமிடங்கள், 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய அந்த நபர், கார் ஒன்றைத் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவைப் பார்வையிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் Tom Engel கூறும்போது, அப்படி கைது செய்யப்பட்ட அந்த நபர் மிக பயங்கரமானவரானால், ஏன் ஒரு பொலிஸ் அதிகாரி மட்டும் அவரை கைது செய்கிறார்? நம்பக்கூடிய விதத்தில் இல்லையே என்கிறார்.

கைது செய்யப்படும் அந்த நபர் முரண்டு பிடிக்கவோ, எதிர்க்கவோ இல்லை, அவர் பாட்டுக்கு அந்த அதிகாரியுடன் நடந்து செல்கிறார்.

அப்படி என்றால் இது அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்துதல் என்கிறார் Engel.

இது மனிதநேயமற்ற முறையில் ஒருவரை நடத்துவதாகும் என்று கூறும் Engel, விசாரணை நடந்து முடியும் வரை அந்த பொலிசாரை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது என்கிறார்.

சம்பவம் தொடர்பாக எட்மண்டன் பொலிஸ் துறையின், பொலிசாரின் நடத்தை குறித்து விசாரிக்கும் பிரிவு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்