இரயில் தண்டவாளம் அருகே விளையாட சென்ற சிறுவர்கள்: அவர்களின் முயற்சியால் காக்கப்பட்ட உயிர்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ரயில் தண்டவாளம் அருகே விளையாடச் சென்ற சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

ஒண்டாரியோவைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சைக்கிளில் ரயில் தண்டவாளம் அருகே விளையாடச் சென்றபோது, ரயில் தண்டவாளத்தில் ஒரு சைக்கிள் கிடப்பதைக் கண்டு அருகில் சென்றிருக்கின்றனர்.

கிட்டச் சென்று பார்க்கும்போது, ரயில் தண்டவாளத்தில் ஒருவர் மயங்கிக் கிடப்பதை அவர்கள் கண்டிருக்கின்றனர்.

இன்னும் அரை மணி நேரத்தில் அவ்வழியாக ஒரு ரயில் வர இருந்த நிலையில், உடனடியாக அருகில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் சென்று அந்த சிறுவர்கள் உதவி கோர, அவர்கள் வந்து அந்த நபரை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்களில் ஒருவர் அவசர உதவியை அழைக்குமாறு வலியுறுத்த, அவர்கள் ஆம்புலன்சை அழைத்திருக்கின்றனர்.

விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர், சரியான நேரத்திற்கு தாங்கள் அழைக்கபட்டதால் அந்த நபரின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.

சற்று நேரத்தில் அந்த பாதையில் ரயில் வர இருந்த நிலையில், அந்த நபரை பத்திரமாக மீட்டதோடு, சரியான நேரத்தில் அவசர உதவியையும் அழைந்த சிறுவர்களை பாராட்டியுள்ள பொலிசார், அந்த சிறுவர்களுக்கு Junior Citizen Award என்னும் விருதை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அந்த சிறுவர்களின் பெற்றோர், இனி தனியாக இரயில் தண்டவாளம் அருகில் எல்லாம் செல்லக்கூடாது என்று சிறுவர்களை எச்சரித்துள்ளனர்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்