மகளுடன் வேறு நாட்டுக்கு சென்ற கனடியர்... அங்கு அவருக்கு நடந்த சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த நபர் தனது மகளுடன் கரிபியன் தீவில் உள்ள St. Maarten நாட்டில் இருந்த நிலையில் அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுள்ளார்.

கனடாவின் வெளியுறவு துறை அமைச்சகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி கனடாவின் Quebec மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கரிபியன் தீவில் உள்ள St. Maarten நாட்டில் தனது மகளுடன் தங்கியுள்ளார்.

அப்போது அங்குள்ள மதுவிடுதி அருகில் அவர்கள் இருந்த நிலையில் நபர் ஒருவர் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடியுள்ளான்.

இந்த சமயத்தில் அந்த நபர் தந்தை மற்றும் மகளை தாக்கியதோடு, தந்தையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளான்.

இதையடுத்து படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக ப்ளோரிடாவுக்கு அனுப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்