ஈஸ்டர் தின தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் பேஸ்புக் முக்கிய பங்கு வகித்திருக்க வாய்ப்பு: பேஸ்புக் கனடா அலுவலர்!

Report Print Balamanuvelan in கனடா

பேஸ்புக் வன்முறையைத் தூண்டி வெறுப்பை வளர்க்கக் கூடியது என்பது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று தெரிவித்துள்ள கனடா நிறுவனத்தின் உலகளாவிய இயக்குநர், இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் பேஸ்புக் முக்கிய பங்கு வகித்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மியான்மரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை துவங்கி, வன்முறையைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதற்காக பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை தாங்கள் 2018இலேயே அறிந்திருந்ததாக கனடா நிறுவனத்தின் உலகளாவிய இயக்குநரான Kevin Chan தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் வெறுப்பு குறித்து கனேடிய நீதிக்கமிட்டிக்கு முன் சாட்சியம் அளித்த Kevin Chan, இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் பேஸ்புக் முக்கிய பங்கு வகித்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த துயரம் தொடர்பில், எங்கள் பேஸ்புக் தவறாக பயன்படுத்தப்பட்டதால், இன மற்றும் மத குழுக்களுக்கிடையிலான பகை ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதன் விளைவாக உலகின் சில பாகங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் Chan தெரிவித்தார்.

பலர் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்தும் இலங்கை போன்ற நாடுகளில், வெறுப்பை பரப்பவும் பதற்றத்தை அதிகரிக்கவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது உண்மைதான் என்றும் அவர் தெரிவித்தார்.

மியான்மர் வன்முறையிலிருந்து பேஸ்புக் பாடம் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் Chan, நவம்பர் 2018இல் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கெதிராக வெறுப்பை மூட்டிவிட, பேஸ்புக் பயன்பட்டதை நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் மனித உரிமைகள் தாக்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட தங்கள் நிறுவனம், பிளவையும் வன்முறையையும் தடுக்க தங்கள் சமூக ஊடகம் போதுமான அளவில் எதையும் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

இத்தகைய தவறை தடுக்கும் வகையில் பேஸ்புக் தனது உள்ளடக்க மீளாய்வு குழுக்களை அதிகரித்துள்ளதாகவும், அபாயம் அதிகம் உள்ள இடங்களில் தொழில் நுட்பம் மற்றும் திட்டங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை தவிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார் Chan.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers