பார்பிக்யூ சிக்கன் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி: வைரலான ஒரு செய்தி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் விருப்ப உணவான பார்பிக்யூ சிக்கன், அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

ஹாலிபாக்சை சேர்ந்த Brady Tovell (10) என்னும் சிறுவனுக்கு திடீரென கடுமையான வாந்தியும் வயிறு வலியும் ஏற்பட்டது.

பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட Bradyக்கு குடல்வால் அழற்சி நோய் (appendicitis) இருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சை செய்து பார்க்கும்போது அவனது குடல்வாலில் அந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் Bradyக்கு என்ன பிரச்சினை என்பதையும் கண்டறிந்தனர்.

முந்தைய நாள் பார்பிக்யூ சிக்கன் செய்தபோது, பார்பிக்யூ அடுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ்ஷிலுள்ள ஒயர் துண்டு ஒன்றை விழுங்கியிருக்கிறான் Brady.

அந்த பிரஷ் ஒயர்தான் இவ்வளவு பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்த Bradyயின் தாய் Tara தன் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையை சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்ய உடனடியாக அது வைரலாகியுள்ளது.

14,000 பேர் அந்த செய்தியை பகிர்ந்துள்ளதோடு 3,000 கமெண்ட்களும் 6,000 லைக்குகளும் அந்த செய்திக்கு கிடைத்திருந்தன.

எனக்கு நேரிட்ட மோசமான அனுபவம் இன்னொரு தாய்க்கு நேரிடக் கூடாது என்பதற்காக அந்த செய்தியை பகிர்ந்து கொண்டேன் என்கிறார் Tara.

அடுத்த முறை என் வீட்டிற்கு வந்தால், அந்த பிரஷ்ஷை எங்கள் வீட்டில் பார்க்க முடியாது என்று கூறும் Tara, அதை அன்றைக்கே தூக்கி வீசி விட்டேன், இனி இன்னும் கவனமாக சமைப்பேன் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers