படுக்கையறை முதல் குளியலறை வரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமராக்கள்: அதிர்ச்சியில் கனேடிய பெண்ணின் குடும்பம்!

Report Print Balamanuvelan in கனடா

கனேடிய பெண் ஒருவர் தனது வீட்டு குளியலறையில் கெமரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதிர்ந்து, வீடு முழுவதும் தேடியபோது, மொத்தம் பத்து கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

மாண்ட்ரியலைச் சேர்ந்த மெலிசா என்ற அந்த பெண்ணின் மகனும் மருமகளும் தற்செயலாக தங்கள் குளியலறையில் ஒரு கெமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

அவர்கள் தங்கள் தாய்க்கு இதை தெரியப்படுத்த, அந்த கெமராவை இயக்கிப் பார்க்கும்போது, அதில் மெலிசாவும் அவரது வீட்டு பெண்களும் குளிப்பது, கழிவறையை பயன்படுத்துவது என அனைத்தும் பதிவாகியிருப்பது கண்டு அதிர்ந்து போனது அந்த குடும்பம்.

அந்த கெமராவை மறைத்து வைத்தது மெலிசாவின் எட்டு ஆண்டு கால காதலன்தான் என்பது தெரியவர, அன்றிரவே கைது செய்யப்பட்டார் அந்த நபர். ஆனாலும் மெலிசாவின் மனதில் ஏதோ குழப்பம்.

தனது பிள்ளைகளை அழைத்து வீடு முழுவதும் சோதனையிடும்படி கூற, அனைவருமாக தேட ஆரம்பித்தார்கள்.

குளியலறையில் ஒன்று, உடை மாற்றும் அறையில் ஒன்று என, தேடத்தேட கெமராக்கள் கிடைத்துக் கொண்டே இருந்திருக்கின்றன.

ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தம் பத்து கெமராக்களும், ஒரு USB கருவியும் கிடைக்க, அவற்றை பரிசோதித்தபோது, அவற்றில் மெலிசாவும் அவரது மகள்களும் உடை மாற்றும் காட்சிகளிலிருந்து, எட்டாண்டுகளுக்குமுன் மெலிசாவும் அவரது காதலரும் பாலுறவு கொள்ளும் காட்சிகள் வரை அனைத்தும் பதிவாகியிருந்ததைக் கண்டு பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆளானது அந்த குடும்பம்.

பிள்ளைகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டார்கள், தாங்கள் தகப்பன் போல கருதிய ஒரு நபர், தங்கள் நிர்வாணத்தை ரசிப்பதற்காக வீடு முழுவதும் கெமராக்களை மறைத்து வைத்ததை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை.

மெலிசாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை, பிள்ளைகளால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை, வீட்டின் வருமானம் பாதிக்க தொடங்கியது.

காயப்படுத்தின சம்பவங்களிலிருந்து வெளிவரும் முயற்சியாக வீட்டை மாற்றினாலும், மனோரீதியான பாதிப்பிலிருந்து அந்த குடும்பத்தால் வெளிவர இயலவில்லை.

இதற்கிடையில் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு உதவி வழங்கப்படுவதை அறிந்த மெலிசா, உதவி கோரி விண்ணப்பித்தார்.

கைது செய்யப்பட்ட அவரது காதலன் மீது ரகசியமாக நிர்வாணத்தை ரசித்தல், சிறார் பாலியல் புகைப்படங்கள் வைத்திருத்தல் மற்றும் வீடியோக்களை உருவாக்குதல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தன.

மெலிசாவின் போதாத காலம், இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவி கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

குடும்பம் முழுக்க மனோரீதியாகவும், பண ரீதியாகவும் பாதிக்கப்பட, தன் போன்றோருக்கும் உதவும் வகையில் சட்டங்களில் சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் மெலிசா.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers