குமுறும் எரிமலையின் விளிம்பில் காதலிக்கு காதலர் கொடுத்த சர்ப்ரைஸ்: ஒரு ரொமாண்டிக் வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

எந்நேரமும் வெடிக்கலாம் என குமுறிக்கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் விளிம்பில் ஏறுவதே பெரிய விடயம், அப்படியிருக்க தனது காதலிக்கு அந்த எரிமலையின் விளிம்பிலேயே ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஒரு காதலர்.

கனடாவைச் சேர்ந்த Jarod, தனது காதலியான Alisonஉடன் இந்தோனேஷியாவிலுள்ள Mount Bromo என்ற எரிமலையை காண சென்றுள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோவில் இருவரும் கீழிருந்து மலை உச்சி வரை நடந்தே செல்கிறார்கள்.

எரிமலையின் விளிம்புக்கு அவர்கள் செல்ல, தனது காதலி முன் மண்டியிட்டு ஒரு மோதிரம் ஒன்றை எடுத்து நீட்டி தனது காதலை Alisonஇடம் தெரிவிக்கிறார் Jarod.

இதை சற்றும் எதிர்பாராத Alison, சற்றே அதிர்ந்தாலும் ஆனந்தக் கண்ணீருடன் Jarodஇன் காதலை ஏற்றுக் கொள்வதோடு, அவரை கட்டியணைத்து முத்தமும் அளிக்கிறார்.

ஏற்கனவே எரிமலையில் ஏறிய மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த Alison, தன் காதலரும் புரபோஸ் செய்ய, என்னால் ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள இயலாது, உடனடியாக எரிமலையிலிருந்து கீழிறங்கி விடுவோம் என்கிறார் தன் காதலனிடம்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers