கனடாவில் நடைபெற்ற ரோபோக்கள் கண்காட்சி! பார்வையாளர்களை அசத்திய ரோபோக்கள்

Report Print Kabilan in கனடா

கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

மான்ட்ரியல் நகரில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள், தலைசிறந்த பொறியாளர்கள், ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

அன்றாட பணிகளில் உதவும் ரோபோக்கள், பளுதூக்கும் ரோபோ, சர்க்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவும் ரோபோ, நான்கு கால்களையுடைய சுமை தூக்கும் ரோபோ ஆகியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தின.

இந்த ரோபோ கண்காட்சியைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்துள்ளனர்.

பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers