கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவருக்கு பெருகும் ஆதரவு!

Report Print Balamanuvelan in கனடா

அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ததற்காக நாடு கடத்தப்பட இருக்கும் இந்திய மாணவருக்கு ஆதரவு பெருகும் அதே நேரத்தில், அவர் கனடாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த ஜோபன்தீப் சந்து மெக்கானிக்கல் எஞ்சீனியரிங் தொடர்பான டிப்ளோமா படிப்பிற்காக கனடா சென்றிருந்தார்.

பெரும் தொகையான கல்விக் கட்டணத்தை செலுத்த அவரது பெற்றோர் தடுமாறுவதை அறிந்த சந்து, பகுதி நேர ஓட்டுநராக பணியாற்றிக்கொண்டே கல்வி பயின்று வந்தார்.

கனடாவை பொருத்தவரையில் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட சந்து நாடுகடத்தப்பட வேண்டும் என தீர்ப்பாயிற்று.

இந்த செய்தி வெளியானதிலிருந்து சந்துவை நாடு கடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரை கனடாவில் வசிக்க அனுமதிக்க கோரி அமைக்கப்பட்டுள்ள ஆன் லைன் விண்ணப்பம் ஒன்றில் இதுவரை 40,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்ந்து கொண்டே போகிறதை காண்கிறோம் என்று கூறும் மாணவர்களுக்கான கனேடிய கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள Sofia Descalzi, அதிக நேரம் வேலை செய்ததற்காக சர்வதேச மாணவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது கேலிக்குரிய விடயமாகும் என்கிறார்.

ஆனால் அரசாங்கமோ, கல்வி கற்க வந்தவர்கள் கல்வி கற்பதில் கவனம் செலுத்தட்டும், அதுதான் அவர்களது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறது.

இதற்கிடையில் அரசாங்கத்தின் உத்தரவுபடி சந்து ,மே மாதம் 31ஆம் திகதி இந்தியாவுக்கு புறப்படுவதற்காக விமான டிக்கெட் வாங்கி விட்டார்.

ஆனால் அந்த விமானம் துபாயில் நின்று செல்லும் என்பதால் வேறு டிக்கெட் வாங்க வேண்டுமென்று அரசாங்கம் கூறிவிட்டது.

எனவே மீண்டும் ஒரு டிக்கெட்டை வாங்கி ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சந்துவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்காலிக வாழிட உரிமம் கோரி சந்து விண்ணப்பித்திருந்த விண்ணப்பத்தின் நிலை கோரி விசாரித்தபோது, அது பரிசீலனையில் இருப்பதாக புலம்பெயர்தல் அமைச்சரின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதால் சந்துவின் நிலை என்னவாகும் என்பது குழப்பமாகவே உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...