தன்னை பிடிக்க தானே பொலிஸுக்கு துப்பு கொடுத்த குற்றவாளி.. நகைச்சுவையான சம்பவம்

Report Print Basu in கனடா

கனடாவில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் தன்னை கைது செய்ய தானே பொலிஸுக்கு உதவியுள்ளார்.

மேற்கு கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அருகில் உள்ள அல்பெர்டா மாகாணத்தின், எட்மன்டன் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பியா பொலிசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி பற்றிய புகைப்படத்துடனான தகவல்கள் உள்ளுர் சேனலில் வெளியிடப்பட்டது. இதைக்கண்ட குற்றவாளி, டிவி சேனலுக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில், எச்சரிக்கை தகவல், முட்டாள்களே: நான் தற்போது எட்மன்டன் நகரில் இருக்கின்றேன், நான் திரும்ப வரமாட்டேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார்.

பேஸ்புக் மூலம் குற்றவாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிசார், எட்மன்டன் நகரில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி கமலூப்ஸிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்