சாதனை தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு குடியுரிமை வழங்க முன் வந்த கனடா... அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு கனடா நாட்டின் குடியுரிமை வழங்க மேயர் முன்வந்த போதும் அவர் மறுத்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அமெரிக்கா, கனடா என்று பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

ஆஸ்கார் உள்ளிட்ட உலகின் பல்வேறு விருதுகளை வென்றுள்ள சாதனை தமிழனான ரகுமானுக்கு கனடா நாட்டின் குடியுரிமையை வழங்க அந்நாட்டின் மேயர் முன்வந்தார்.

ஆனால் இதனை ரகுமான் மறுத்துவிட்டார், அவர் கூறுகையில், கனடா நாட்டின் மேயர் எனக்குக் குடியுரிமை தர முன்வந்ததற்கு நன்றி. அதற்காக கடமைப்பட்டுள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் கனடா மேயருக்குக் கடமைப்பட்டவனாக உள்ளேன். இந்தியாவில்தான் எனது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் இருக்கின்றனர்.

நீங்கள் இந்தியா வந்தால் எங்கள் இசை பள்ளிக்கு வருகை தாருங்கள். இந்தியாவும், கனடாவும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை அதிகம் வழங்க ஆர்வமுடன் இருக்கிறேன் என கூறினார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்