கனடாவில் ஆற்றங்கரையில் புகைப்படம் எடுத்த இந்திய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர் ஒருவர், ஆற்றங்கரையில் புகைப்படம் எடுக்கும்போது தவறி ஆற்றில் விழுந்தார்.

அந்த 23 வயது இளைஞர், தாம்சன் நதியில் நீந்த தனது நண்பர்களுடன் சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

அவர் நதிக்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி நதியில் விழுந்ததாக தெரியவந்துள்ளது.

அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடையவே பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து தேடுதல் வேட்டை நிகழ்த்தியதில், நதியிலிருந்து அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.

நதிகள் போன்ற இடங்கள் அருகே இருக்கும்போது பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் பெற்றோருடன் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரது பெயர், புகைப்படம் போன்ற விடயங்களை வெளியிடவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers