கார் பார்க்கிங் பிரச்சனை: பட்டாக்கத்தியை உருவிய பெண்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் கார் பார்க்கிங்கின்போது ஏற்பட்ட பிரச்சினைக்காக ஒரு பெண் உருவிய பட்டாக்கத்தியுடன் சண்டைக்கு வந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Langfordஇல் ஒரு பெண் தனது காரை பார்க்கிங் செய்ய முயலும்போது, வேகமாக வந்த இன்னொரு கார், முதலில் வந்த காரை முந்திக்கொண்டு அந்த இடத்தில் பார்க் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் அந்த இரண்டு கார்களிலிருந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

சட்டென கார் கதவைத் திறந்த இரண்டாவது காரில் வந்த பெண், காருக்குள்ளிருந்து ஒரு பட்டாக்கத்தியை எடுத்து மிரட்டியிருக்கிறார்.

உடனடியாக அங்கிருந்து விலகின முதல் காரின் ஓட்டுநரான பெண், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிசார், வாகன நிறுத்தம் போன்ற சாலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக சண்டையிட வேண்டாம் என்றும், பாதுகாப்பான ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பொலிசாரை உதவிக்கு அழைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டிய 29 வயது பெண் பொலிசாருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால், தானாக வந்து சரணடையுமாறு அந்த பெண்ணை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்