உயிரை பணயம் வைத்து நண்பனை காப்பாற்றிய வாயில்லா ஜீவன்! வைரல் வீடியோ

Report Print Vijay Amburore in கனடா

காரின் பின் பகுதியில் சிக்கவிருந்த தன்னுடைய நண்பனை வாயில்லா ஜீவன் ஒன்று வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கனடா நாட்டின் கியூபெக் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மூன்று வளர்ப்பு நாய்களை அழைத்துக்கொண்டு வரும் உரிமையாளர் ஒருவர் அவற்றுடன் சிறிது நேரம் விளையாடுகிறார்.

அந்த சமயம் அங்கு வரும் பெண் ஒருவர் நேராக தன்னுடைய காருக்கு சென்று அதனை பின்பக்கமாக ஒட்டி வருகிறார்.

chihuahua வகை நாயானது மிகவும் குட்டியாக இருப்பதால், வேகமாக அந்த பனிப்படலத்தை கடக்க முடியவில்லை. அதற்குள் அந்த காரும் வேகமாக பின்னோக்கி வருகிறது.

chihuahua-வின் மீது கார் ஏறிவிடுமோ என அனைவரும் பதறியபடியே பார்க்க, அதன் நண்பனான Border collie வகை நாய் வேகமாகா ஓடி வந்து அதனை அங்கிருந்து தூக்கி செல்கிறது.

இதற்கிடையில் காரை எடுத்துச்சென்ற பெண், மீண்டும் தன்னுடைய காரை அங்கேயே நிறுத்திவிட்டு, அந்த இரன்டு நாய்களையும் கட்டித்தழுவுகிறார்.

இதுகுறித்து கூறிய அந்த பெண், நான் கண்ணாடியில் ஏதோ ஒன்று பின்பக்கம் செல்வதை பார்த்தேன். அதனை நசுக்கிவிட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டு காரை வேகமாக நிறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்