லாட்டரியில் ஒரு வருடத்துக்கு முன்னர் விழுந்த லட்சக்கணக்கான பரிசு.... பரிசை இன்னும் வாங்காத வெற்றியாளர்

Report Print Raju Raju in கனடா

கனடா லாட்டரியில் ஒரு வருடத்துக்கு முன்னர் குறித்த சீட்டுக்கு $50,000 பரிசு விழுந்த நிலையில் இன்னும் அந்த பரிசை யாரும் வந்து வாங்காத சூழல் நிலவுவதால் பரிசை பெற கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோ லாட்டரி கார்ப்ரேஷன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2018 ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் $50,000 பரிசு விழுந்தது.

ஆனால் அந்த சீட்டை வாங்கியவர்கள் அந்த பரிசை இன்னும் பெற்று கொள்ளவில்லை.

கடைசியாக அதை பெற ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதாவது இரண்டு வாரங்கள் மட்டுமே அந்த பரிசை பெற இறுதியாக கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்