லாட்டரி சீட்டில் கோடிக்கணக்கில் விழுந்த பரிசு... சீட்டு வாங்கியதையே மறந்த தம்பதி... ஒரு வருடம் கழித்து நடந்த அதிசயம்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த தம்பதி ஒரு ஆண்டுக்கு முன்னர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 1 மில்லியன் கனடிய டொலர்கள் பரிசாக விழுந்த நிலையில் லாட்டரி சீட்டு காலாவதி ஆகும் சமயத்தில் அந்த பரிசை அதிர்ஷ்டவசமாக பெற்றுள்ளனர்.

Quebec மாகாணத்தை சேர்ந்தவர் ரோஜர் லாரக். இவர் மனைவி நிகோல் பெட்னீல்ட். தம்பதி கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கினார்கள்.

இதற்கான குலுக்கல் அதே ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெற்றது.

அந்த குலுக்கலில் ரோஜர் - நிகோல் வாங்கிய சீட்டுக்கு 1 மில்லியன் கனடிய டொலர்கள் பரிசாக விழுந்தது. ஆனால் அவர்கள் அந்த லாட்டரி சீட்டு குறித்து மறந்துவிட்டனர்.

இந்நிலையில் கடந்தவாரம் தம்பதியின் பேரன் புத்தகம் ஒன்றை கேட்டுள்ளான். இதையடுத்து ரோஜர் அவன் புத்தகத்தை எடுக்கும்போது அதன் உள்ளிருந்து ஒரு சீட்டு கீழே விழுந்தது.

அதை எடுத்து பார்த்தபோது அது தான் கடந்தாண்டு வாங்கிய லட்டரி சீட்டு என்பதை ரோஜர் உணர்ந்து அதன் எண்ணை தேடிய போது முதல் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து தம்பதிகள் லாட்டரி நிறுவனத்துக்கு சென்று பரிசை பெற்றனர்.

இது குறித்து ரோஜர் கூறுகையில், என் பேரன் புத்தகத்தை கேட்கவில்லையெனில் லாட்டரி சீட்டு எனக்கு கிடைத்திருக்காது.

விரைவில் அந்த சீட்டு காலாவதி ஆகவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்