விமான விபத்தில் பலியான மொத்த குடும்பம்: உடல்களை மீட்க புறப்பட்டு சென்ற கனேடியர்

Report Print Arbin Arbin in கனடா

எத்தியோப்பிய விமான விபத்தில் மொத்த குடும்பத்தையும் பலி கொடுத்த கனேடியர், தற்போது உடல்களை மீட்க புறப்பட்டு சென்றுள்ளார்.

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் குடியிருக்கும் மனந்து வைத்யாவின் குடும்பமே கடந்த ஞாயிறன்று நடந்த எத்தியோப்பிய விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 6 பேர்.

இந்த நிலையில், உடல்களை அடையாளம் காணவும், மீட்டு சொந்த நாட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு மேற்கொள்ளவும் மனந்து வைத்யா எத்தியோப்பியா புறப்பட்டு சென்றுள்ளார்.

இவரது பெற்றோர், சகோதரி, அவரது கணவர் மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் என மொத்தம் 6 பேர் கடந்த ஞாயிறன்று விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைத்யா, தமது மொத்த குடும்பத்தையும் தொலைத்துவிட்டு நிர்க்கிறேன், என்னால் அச்சம்பவத்தை மறக்க முடியவில்லை, மொத்தமாக இடிந்துபோயிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கூடவே தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அடிஸ் அபாபா செல்லும் வைத்யா,

தமது உறவினர்களின் உடல்களுடன் இந்தியா செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கனேடிய மற்றும் இந்திய தூதர அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறும் வைத்யா, அடுத்த இரு தினங்கள் எத்தியோப்பியாவில் தங்க முடிவு செய்துள்ளதாகவும்,

உறவினர்களின் சடலங்களை அடையாளம் காண அங்குள்ள அதிகாரிகளுக்கு உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீல் பொலிசார் தமது டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாக கூறும் அவர்,

அது தமது உறவினர்களை அடையாளம் காண உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers