ட்ரூடோவா, ஊழல் செய்தாரா? கனடாவில் சர்ச்சை! நம்ப மறுக்கும் உலகம்

Report Print Balamanuvelan in கனடா
319Shares

கியூபெக் நிறுவனம் ஒன்றிற்கெதிரான வழக்கில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகம் தலையிட்டதாக பெருமளவில் சர்ச்சை ஒன்று அனுதினமும் தலைப்புச் செய்தியாகிவரும் நிலையில், இன்னும் உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் அதை நம்ப மறுத்து வருகிறார்கள்.

வாஷிங்டனைச் சேர்ந்த Janet McCarty செய்தித்தாளில் ஜஸ்டின் ட்ரூடோ மீதான ஊழல் புகார் குறித்த செய்தியை படித்ததும் முகம் சுழிக்கிறார்.

உலகின் பல நாடுகளில் உள்ளவர்களைப்போலவே, Janetம் ட்ரூடோ என்பவர் சந்தேகத்திற்கிடமற்ற அப்பழுக்கற்ற சர்வதேச செல்லப்பிள்ளை என்று நம்புகிறார். இந்த செய்தி உண்மை என்றால், ஜஸ்டின் நாங்கள் நினைத்த மாதிரியான நபர் அல்ல என்கிறார் அவர்.

லண்டனில் பிரபல பத்திரிகை ஒன்றின் அமெரிக்க பிரிவின் ஆசிரியராக இருக்கும் John Prideaux, பிரித்தானிய பிரெக்சிட்டையும், அமெரிக்க அரசியல் பிரச்சினைகளையும் தாண்டி பெரிய அளவில் ட்ரூடோவின் ஊழல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.

உலகத்தில் பல்வேறு பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், கனடா பிரதமரைக் குறித்த ஒரு செய்தி இவ்வளவு பெரிதாக பேசப்படுகிறதென்றால், அது உண்மையிலேயே பெரிய விடயம்தான் என்று கூறும் John Prideaux, இந்த ஊழல், ட்ரூடோவின் சர்வதேச புகழுக்கு நிச்சயம் மிக மோசமான அளவில் களங்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.

அமெரிக்காவிலும் இந்த கதைதான் ஓடுகிறது. ட்ரூடோவின் ஊழல் குறித்து கேள்விப்படும் அமெரிக்கர்கள், தங்கள் தோள்களைச் சுருக்கிக் கொள்கிறார்கள், ஆச்சரியப்படவும் செய்கிறார்கள்.

அது உண்மையாகத்தான் இருக்கும், ஆனால் விசாரிக்க வேண்டும் என்கிறார் Wynne Tysdal.

என்னைப்பொறுத்த வரை கனேடியர்கள் என்றாலே எப்போதுமே நேர்மையானவர்கள், விதிகளை மதிப்பவர்கள் என்று எண்ணியிருந்தேன் என்று கூறும் Wynne Tysdal, நமது அண்டை நாட்டுக்காரர்களைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுவது கஷ்டமாக இருக்கிறது என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்