ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த அறிவித்த கனடா அரசு : சீன தூதரகம் கடும் எதிர்ப்பு

Report Print Kabilan in கனடா

சீனாவின் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளை, அமெரிக்காவுக்கு நாடு கடத்த கனடா அரசு அனுமதி அளிப்பதாக அறிவித்ததற்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீது 23 குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா சுமத்தியது. இந்நிலையில், ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர், வான்கூவரில் உள்ள அவரது இல்லத்தில் தான் தங்கி இருக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளின் பேரில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளிப்போம் என்று கனடா அரசு அறிவித்தது. மேலும், நாடு கடத்துவதற்கான நடைமுறைகளையும் அந்நாடு தொடங்கியுள்ளது.

எனினும் இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என்று கூறியிருந்த நிலையில், மெங்வான்ஜவ்வை நாடு கடத்துவது தொடர்பான விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.

இந்நிலையில், கனடா அரசின் முடிவுக்கு ஒட்டவா நகரில் உள்ள சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இது அரசியல் துன்புறுத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விசாரணையில் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் வரும் 6ஆம் திகதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்