கனடா இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் வெற்றி: பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பம்!

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி தெற்கு நகர இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

NDP கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் 38.5 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை அடுத்து வந்த மக்கள் கட்சிக்கு 11 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தனது வெற்றியை அடுத்து தனது ஆதரவாளர்களிடையே பேசிய சிங், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வறுமைக்கு எதிராக போரிடப்போவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்தபின் உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் கடினமாக உழைப்பேன் என்றும் கூறினார் சிங்.

1979இல் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த சிங்கின் குடும்பம், பின்னர் ஒண்டாரியோவுக்கு குடி பெயர்ந்தது.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சிங், கனடா வரலாற்றில், பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இருக்கும் முதல் வெள்ளையரல்லாத தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்