கனேடிய சிறுமியை கொன்ற கொடூர தந்தையின் தற்போதைய நிலை: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சொந்த மகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த தந்தை தற்போது துப்பாக்கி குண்டு காயங்களில் இருந்து குணமாகி வருவதாக பீல் பிராந்திய பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்திய வம்சாவளி சிறுமி ரியா ராஜ்குமார் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து ஒன்ராறியோ மாகாண பொலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

தந்தையுடன் சென்ற சிறுமி குடியிருப்பு திரும்பாததை அடுத்து அவரது தாயார் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு உடனடியாம அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் Orillia பகுதி அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வைத்து ரியாவின் தந்தை ரூபேஷ் ராஜ்குமாரை பொலிசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வெள்ளியன்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது சிகிச்சையில் இருந்து வரும் ரூபேஷ் ராஜ்குமார், குணமான பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கொல்லப்பட்ட சிறுமி ரியாவின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் புதனன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய் அன்று மாலை 7.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிறுமி ரியாவின் இறுதிச்சடங்குகளுக்கான நிதியை திரட்டும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ரியா ராஜ்குமார் தந்தையுடன் மாயமானதை அடுத்து அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காதலர் தினத்தன்று அவரது பிறந்தநாளும் இணைந்து வந்ததால் ரூபேஷ் ராஜ்குமாரின் ஆசைப்படி இருவரும் கொண்ட்டாட்டத்தின் ஒருபகுதியாக வெளியே சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட நேரம் தாண்டிய நிலையில் ரூபேஷிடம் இருந்து பதறவைக்கும் தகவல் ஒன்று ரியாவின் தாயாருக்கு கிடைத்துள்ளது.

அதில் ரியாவுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதை உணர்ந்த அவர் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்.

அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்துளிகளில், பொலிசார் ரியாவின் மரணத்தை உறுதி செய்துள்ளனர்.

ரூபேஷ் ராஜ்குமாருக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்து 11 வயதேயான சிறுமி ரியாவின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers