கணினியில் £100 மில்லியன் பணத்தை வைத்திருந்த தொழிலதிபர் திடீர் மரணம்: எடுக்க முடியாமல் தவிக்கும் மனைவி

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்தியாவுக்கு வந்த போது உயிரிழந்த சூழலில் £100 மில்லியன் மதிப்பிலான எண்ணிம நாணயங்களை (digital currency) அவர் கணினியில் வைத்திருந்த நிலையில் அதன் பாஸ்வேர்டை யாருக்குமே தெரிவிக்காமலேயே இறந்துள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் Gerald Cotten. இவர் Quadriga என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

அதாவது ஓன்லைன் மூலமே பணவர்த்தகம் செய்யும் Bitcoin, Litecoin போன்ற எண்ணிம நாணயங்களை வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனாதை ஆசிரங்களில் தன்னார்வ தொண்டு செய்ய Gerald வந்தார்.

அப்போது குடலில் ஏற்பட்ட அழற்சி நோயால் Gerald உயிரிழந்தார்.

இந்நிலையில் தனது நிறுவனத்தின் பிரதான கணினியில் £105 மில்லியன் எண்ணிம நாணயங்களை (digital currency) அவர் சேமித்து வைத்திருந்தார். இது அவரின் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களின் பணமாகும்.

இந்நிலையில் அந்த கணினியின் பாஸ்வேர்டை யாரிடமும் கூறாமல் அவர் இறந்துள்ளார்.

இதனால் அந்த பணத்தை எப்படி எடுப்பது என யாருக்குமே தெரியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து Gerald -ன் மனைவி ஜெனீபர் ராபர்ட்சன் கூறுகையில், என்னால் கணினி பாஸ்வேர்டை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

என் கணவரின் தொழிலில் நான் தலையிட்டதில்லை, அவர் உயிரோடு இருக்கும் போது என்னிடம் பாஸ்வேர்டை சொல்லவில்லை.

இது தொடர்பாக கணினி வல்லுனர்களை சந்தித்தேன், ஆனால் அவர்கள் இதுவரை இதுபோன்ற பிரச்சனையில் சிறிதளவு பணத்தை மட்டுமே மீட்டதாக கூறியுள்ளனர்.

இதோடு, என் கணவர் எப்படி இறந்தார் மற்றும் அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா என சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கனடா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்