கனடாவில் உடைகளை தானம் செய்ய சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் டொராண்டோவில் உடைகளை தானமாக வழங்குவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்று வைத்திருந்த பெட்டிக்குள் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

Crystal Papineau (35), தொண்டு நிறுவனம் ஒன்று வைத்திருந்த பெட்டிக்குள் உடைகளை போட முயன்றபோது தவறி தானே பெட்டிக்குள் தலைகீழாக கவிழ்ந்திருக்கிறார். பாதி உடல் அந்த பெட்டிக்குள் சிக்கிக் கொள்ள, கூக்குரல் எழுப்பியிருக்கிறார் Crystal.

அக்கம்பக்கத்தவர்கள் அவரது கூக்குரலைக் கேட்டு பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் வந்து பாதி பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் உடலை மீட்டிருக்கின்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

2015 முதல் இப்படி உடைகளை தானமாக வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ஏறி, பெட்டிக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

சென்ற மாதம் வான்கூவரைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் இதேபோல் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

டொராண்டோ மேயரான ஜான், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதோடு, அந்த பெட்டிகளின் பாதுகாப்பு உட்பட பல அம்சங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers