கனடாவிலிருந்து தவறுதலாக பிரித்தானிய பொலிசாரை அழைத்த பெண்: அரை மணி நேரத்திற்குள் பொலிசார் செய்த செயல்

Report Print Balamanuvelan in கனடா

தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கனேடிய இளம்பெண், உதவி கோரி கனடாவிலுள்ள உதவி மையத்தை அழைப்பதற்கு பதில் பிரித்தானியாவுக்கு அழைக்க, அவர் தவறாக அழைத்ததாகக் கூறி அழைப்பைத் துண்டிக்காமல் சமயோகிதமாக செயல்பட்ட பிரித்தானிய பொலிசாரால் ஒரு இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கனடாவில் Surrey என்ற நகரம் இருப்பதுபோலவே பிரித்தானியாவிலும் Surrey என்றொரு நகரம் இருக்கிறது.

கனேடிய இளம்பெண் ஒருவர் தற்கொலை எண்ணம் தோன்ற, உதவிக்கு கனடாவிலுள்ள Surrey நகருக்கு அழைப்பதற்கு பதில் தவறாக பிரித்தானியாவிற்கு போன் செய்தார்.

அந்த அழைப்பை ஏற்ற ஒரு பிரித்தானிய அலுவலர் அவரிடம் பேச்சுக் கொடுத்தவாறே தனது சக ஊழியர்களுக்கு தகவலை வெளிப்படுத்த, அவர்களில் ஒருவர், கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் பொலிஸ் அதிகாரி தற்போது பணி நிமித்தம் பிரித்தானியாவில் இருப்பதை நினைவு கூர்ந்து அவரை உதவிக்கு அழைத்தார்.

Antoinette Rowe என்னும் அந்த பெண் பொலிஸ் அதிகாரி கனடாவிலுள்ள தனது சக பொலிசாரை அழைத்து நிலைமையை விளக்கி கனடாவிலுள்ள Surrey நகரில் ஒரு பெண்ணுக்கு உதவி தேவைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக கனடா பொலிசார் அந்த பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவர் பிரித்தானிய பொலிசாரை அழைத்த அரை மணி நேரத்திற்குள் அவரை மீட்டுள்ளனர்.

உலகின் மறு பக்கம் வாழும் ஒரு பெண்ணுக்கு உதவி தேவைப்பட்டபோது, எல்லைகளைப் பாராமல் மனிதாபிமானத்துடன் விரைந்து அவர் உயிரைக் காப்பாற்ற உதவிய இரு நாட்டு பொலிசாருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers